மனிதன் உயிர்வாழ உணவு அவசியம்.
நாம் உட்கொள்ளும் உணவே நமது குணநலன்களை தீர்மானிக்கிறது. இந்த குணநலன்களே
நம்முடைய எண்ணம், செயல், சிந்தனைகளை தீர்மானிக்கிறது. இவை எல்லாம் சேர்ந்தே
ஒரு சமூகத்தின் வாழ்வியலையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும்
பிரதிபலிக்கிறது.
நம் முன்னோர்கள் குண நலன்களின் அடிப்படையில் உணவை மூன்றாக பிரித்துக்
கூறியிருக்கின்றனர் என்பதை முந்தைய பதிவுகளில் பார்த்தோம். அந்த வகையில்
இன்று முதலாவது பிரிவான சாத்வீக உணவு பற்றி பார்ப்போம்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்கிற பழமொழி நாமனைவரும் அறிந்ததே!
உணவின் தரம், சுவை, அளவு எல்லாம் மிதமான அளவில் அமைந்திருந்தால் அதனை சாத்வீகமான உணவு எனலாம். இத்தகைய உணவுகளே
மனிதத் தன்மைகள் எனப்படும் அருங் குணங்களான அமைதி, அகிம்சை, வாய்மை, தவம்,
பக்தி, கருணை, மன்னிக்கும் பெருங்குணம், திருப்தி, கண்ணியம், திருடாமை,
புறங்கூறாமை, நிதானம், எப்போதும் மகிழ்ச்சி போன்றவற்றை ஒருவருக்குள்
வளர்த்தெடுக்கிறது என்கின்றனர். சாத்வீக உணவுகளை தொடர்ந்து உண்டு வந்தால் குண நலன்கள் இயல்பாக வாய்க்குமாம்.
சித்தர்கள், யோகிகள், துறவிகள், ஆத்ம சாதகர்கள் போன்றவர்கள் இத்தகைய உணவினையே நாம் உண்ண வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
சரி, எவையெல்லாம் சாத்வீக உணவுகள், நமது முன்னோர்கள் அவற்றையும் தெளிவாக வரையறுத்துக் கூறியிருக்கின்றனர்.
விலங்கில் இருந்து பெறப்படும் உணவு..
1. சுத்தமான பசும்பால்
2. சுத்தமான பசுந்தயிர்
3. பசு வெண்ணெய்
4. பசுவின் நெய்
எண்ணை வகைகள்..
5. நல்லெண்ணெய் (எள் எண்ணெய்)
6. இலுப்பை எண்ணெய்
7. தேங்காய் எண்ணெய்
8. சுத்தமான தேன்
பயிர் வகைகள்..
9. பேரீச்சங்காய்
10. பேரீச்சம்பழம்
11. பாதாம் பருப்பு
12. கொப்பரை
13. பச்சைக் கற்பூரம்
14. குங்கமப் பூ (சுத்தமானது)
15. ஜாதிக்காய்
16. ஜாதிப் பத்திரி
17. திராட்சை
18. ஏலரிசி
19. கற்கண்டு
20. வெல்லச் சர்க்கரை
21. வெல்லம்
22. சுக்கு
23. மிளகு
24. திப்பிலி
25. வெந்தயம்
26. எள்
27. உளுந்து
28. அவல்
29. பொரி
30. பச்சைப் பயறு
31. திணை
32. இஞ்சி
33. வால் மிளகு
34. வெள்ளை மிளகு
35. ஜீரகம்
36. கோதுமை
37. வாற்கோதுமை
38. பச்சை அரிசி
39. சீரகச் சம்பா
40. மிளகுச் சம்பா
41. கார் அரிசி
42. குன்றிமணிச் சம்பா
காய்கறிகள், கனிகள்..
1. வாழைப்பழம் (வாழைப்பழங்களில் பூவன் பழம் மட்டுமே அதிகம் உகந்ததாக குறிப்பிடப்படுகிறது)
2. மொந்தன் வாழைப்பழம்
3. பச்சை நாடன் வாழைப்பழம்
4. பேயன் வாழைப்பழம்
5. ரஸ்தாளி
6. செவ்வாழை
7. வெண் வாழை
8. மலைவாழை
9. நவரை வாழைப்பழம்
10. அடுக்கு வாழைப்பழம்
11. கருவாழைப்பழம்
12. கற்பூர வல்லி
13. இளநீர்
14. பன்னீர்
15. தாளம் நீர்
16. மல்லிகை நீர்
17. மாம்பழம் (மிகச் சத்துக் கொண்டது)
18. கொய்யாப்பழம்
19. ஜாதி நார்த்தைப் பழம்
20. கொழிஞ்சி நார்த்தைப் பழம்
21. கிச்சிலிப் பழம்
22. நார்த்தம் பழம்
23. நாவல் பழம்
24. பலாப்பழம்
25. முலைக்கீரை
26. மணத்தக்காளி
27. பொன்னாம் கண்ணிக் கீரை
28. கொத்தமல்லிக் கீரை
29. வெந்தயக்கீரை
30. சக்ரவர்த்திக் கீரை
31. அகத்திக்கீரை
32. அகத்திப்பூ
33. வேப்பம்பூ
34. பசு முன்னை
35. பொன் முசுட்டை
36. முசுட்டை
37. கருவேப்பிலை
38. தூதுளை இலை
39. வஜ்ரவல்லி (பிரண்டை)
40. கீரைத் தண்டு
41. வாழைத்தண்டு
42. செங்கீரைத்தண்டு
43. வெண்கீரைத் தண்டு
44. சேப்பந்தண்டு
45. சேப்பங்கிழங்கு
46. தாமரைக் கிழங்கு
47. சர்க்கரைவள்ளிக் கிழங்கு
48. தேங்காய்
49. அருநெல்லிக்காய்
50. நெல்லிக்காய்
51. சுண்டைக்காய்
52. சுக்கங்காய்
53. மாங்காய்
54. கரைக்காய்
55. இலந்தைக்காய் - பழம்
56. வெள்ளரிக்காய்
57. கொம்பு பாகல்
58. மிதி பாகல்
59. பலாக்காய்
60. ம்முள்ளுக் கத்தரிக்காய்
61. விளாம்பழம்
62. நார்த்தங்காய்
63. கடார நார்த்தை காய்
64. கொழிஞ்சி நார்த்தங்காய்
65. மணத்தக்காளிக் காய்
66. மலைச் சுண்டைக்காய்
இவை எல்லாம் சாத்வீக உணவுகளாகும். இந்த உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் மேலே சொன்ன பண்புகள் தழைத்தோங்கும்.
No comments:
Post a Comment