உயிரின் ஆதாரம் சுவாசம் எனப்படும் மூச்சு. பிறந்த நொடியில் இருந்து இறுதி
மூச்சு வரை இந்த சுவாசம் நமது உடலின் ஊடே ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னமும்
தீர்க்கமாய் சொல்வதானால் இந்த சுவாசம்தான் வாழ்க்கை. இந்த உண்மையை நாம்
அறிந்திருக்கும் அளவுக்கு அதை உணரவில்லை என்பதே உண்மை.
இது பற்றி விரிவாய் எழுதுவதாய் முன்னரே குண்டலினி தொடரில்
குறிப்பிட்டிருந்தேன். அதன் அடிப்படையில் இனி வரும் நாட்களில் இந்த
மூச்சுக்கலை பற்றிய தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
ப்ராணன் என்றால் மூச்சு, யாமம் என்றால் ஒழுங்கு செய்தல் ஆகும். யோக
நெறியில் நான்காவது படிநிலையாக ப்ராணயாமத்தை பதஞ்சலி முனிவர்
அருளியிருக்கிறார். இந்த மூச்சு நமது உடலில் மூன்று கட்டமாய் நிகழ்கிறது.
மூச்சை உள்ளே இழுத்தல், இதனை "பூரகம்" என்கின்றனர்.
மூச்சை உள்ளேநிறுத்துதல், இதனை "கும்பகம்" என்கின்றனர்.
மூச்சை வெளியேற்றுதல், இதனை "ரேசகம்" என்கின்றனர்.
இந்த மூன்று செயல்களும் தொடர்ந்து சீரான தாள கதியில் நம்முடலில் ஓடிக்
கொண்டேயிருக்கிறது. இந்த மூன்று நிகழ்வுகளின் ஊடே செய்யப் பட்ட பல்வேறு
பரிசோதனைகளின் திரளே ப்ராணயாமம் எனப்படும் மூச்சுக் கலை.
நவீன அறிவியலின் படி நமது உடலில் ஒரு நிமிடத்தில் 15 முதல் 20 முறை சுவாசம்
நடக்கிறது. உறங்கும் போது இதன் அளவு 10 முதல் 12 ஆக குறைகிறது. ஆழ்நிலை
தியானம் போன்றவைகளைச் செய்யும் போது இந்த அளவு இன்னும் பாதியாகக் குறைந்து
விடுகிறது.
எல்லாம் சரிதான், இந்த மூச்சு நமது உடலில் எப்படி நடக்கிறது?
No comments:
Post a Comment