நம் முன்னோர்கள் உணவினை குண நலன்களின் அடிப்படையில் மூன்று வகையாக பிரித்துக் கூறியிருப்பதையும், அதில் முதல் வகையான சாத்வீக உணவு பற்றியும் முந்தைய பதிவுகளின் ஊடே பார்த்தோம். அந்த வகையில் இன்று இரண்டாவது வகையான ராஜோ உணவு பற்றி பார்ப்போம்.
சுறுசுறுப்பு, விறுவிறுப்பு, உடல் வலிமை, தான் என்ற திணவு, அதீதமான
துணிச்சல், வீரம், காமம், பேராசை, கோபம், மனவெழுச்சிகளின் திடீர்
வெளிப்பாடு, மன மாறுதல்களின் திடீர்த் தோற்றம், எதையாவது சாதிக்க வேண்டும்
என்ற துடிதுடிப்பு, பரபரப்பு, எதையும் முடித்தே தீருவோம் என்ற வேகம் போன்ற
குண இயல்புகள் ரஜோ வகை உணவுகளைத் தொடர்ந்து உண்டு வருவதால் ஏற்படுமாம்.
மேலும், இந்த உலகில் சாதிக்கத் துடிக்கும், வாழத் துடிக்கும், வெற்றி முரசு
கொட்டத் துடிக்கும் மனிதர்கள், சமூகங்கள் எல்லாம், இக்குணத்தைப்
பெற்றவர்களாக இருப்பார்களாம்.
இவை எல்லாம் சரி தான்.!, எவையெல்லாம் ரஜோ உணவுகள்?,
நமது முன்னோர்கள் அவற்றையும் தெளிவாக வரையறுத்துக் கூறியிருக்கின்றனர்.
ரஜோ குணப் பொருள்கள்..
1. பச்சை மிளகாய்
2. ஊசி மிளகாய்
3. எலுமிச்சங்காய்
4. எலுமிச்சம்பழம்
5. புளியங்காய்
6. அத்திக்காய்
7. ஆவாரம்பூ
8. வாழைப்பூ
9. அறுகீரை
10. பறங்கி இலை
11. புதீனா
12. பார வெற்றிலை
13. மாகாளிக் கிழங்கு
14. காரக் கருணைக் கிழங்கு
15. கொட்டிக் கிழங்கு
16. கருணைக் கிழங்கு
17. தாமரைக் கிழங்கு
18. சிறு கிழங்கு
19. களிப்பாக்கு
20. கடுகு எண்ணெய்
21. வெள்ளாட்டுப்பால்
22. வெள்ளாட்டுத் தயிர்
23. வெள்ளாட்டு எண்ணெய்
24. வெள்ளாட்டு நெய்
25. ஓமம்
26. கசகசா
27. கலப்பு நெய்
28. கல்யாணப் பூசணிக்காய்
29. கோடைப் பூசணி
30. பன்றிப் புடலங்காய்
31. வெண்டைக்காய்
32. புடலங்காய்
33. கருஞ்சீரகம்
34. காட்டு சீரகம்
35. பிறப்பு சீரகம்
36. லவங்கம்
37. லவங்கப்பட்டை
38. அப்பளாக் காரம்
39. வீட்டு உப்பு
40. புளி
41. மிளகாய்
42. நாய்க்கடுகு
43. செங்கடுகு
44. சிறு கடுகு
45. வெண்கடுகு
46. தனியா
47. கஸ்தூரி மஞ்சள்
48. கஸ்தூரி
49. மஞ்சள்
50. முந்திரிப்பருப்பு
51. மணிலா
52. ஜவ்வரசி
53. துவரம்பருப்பு
54. அன்னாசி
55. மாதுளை
56. கொமட்டி மாதுளை
57. நாக்கில் பட்டால் விறுவிறுவென்று எரிச்சல் தரும் பொருள்கள் எல்லாம் இவ்வகையில் சேரும்.
இப்பொருள்கள் எல்லாம் விறுவிறு, சுறுசுறு குணம் கொண்டவை. உலக வாழ்வில்
உள்ளவர்களை, உணர்ச்சிகளத் தூண்டி ஆட்டிப்படைக்கும் குணம் கொண்டவை இவை.
No comments:
Post a Comment